மதுரை

நாளை சீருடைப் பணியாளர் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு

DIN

தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர், சிறைத் துறைக் காவலர்களுக்கான 19 ஆயிரம் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவுள்ளனர். மதுரை நகரில் 20 மையங்கள், ஊரகப்பகுதிகளில் 25 மையங்கள் என மொத்தம் 45 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 11.20-க்கு முடிவடைகிறது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உடல்தகுதித் தேர்வு நடத்தப்படும்.  தென்மண்டல  ஐஜி தலைமையில், டிஐஜி, ஊரகக் கண்காணிப்பாளர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தேர்வுப் பணியில்  அமைச்சகப் பணியாளர்கள் 600 பேர், பாதுகாப்புப் பணியில் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT