முகப்பு
மதுரை

கல்லூரியில் காஷ்மீர் பற்றிய கருத்தரங்கு

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் மன்றம் இணைந்து காஷ்மீரின் முக்கியத்துவம்  என்ற தலைப்பில் தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் மன்றம் இணைந்து காஷ்மீரின் முக்கியத்துவம்  என்ற தலைப்பில் தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இணைச் செயலர் நாராயணன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் மன்றத்தின் செயலர் ராமசாமி மெய்ப்பன் வரவேற்றார்.  கலைமகள் பத்திரிகை வெளியீட்டாளர் ராஜன் வாழ்த்திப் பேசினார். இந்த கருத்தரங்கில் இந்தியா பவுன்டேசன் இயக்குநரும், மேஜர் ஜெனரலுமான துருவ் சி. கட்டோஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:  
கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் தீவிரவாதிகளின் ஊடுருவல்  மற்றும் தாக்குதலின் காரணமாக இம்மாநிலத்தின் இயற்கை வளம், பொருளாதாரம்,  மனித வளம் முற்றிலுமான சீரழிந்து விட்டது.  காங்கிரஸ் ஆட்சியின் போது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ எந்த விதமான உறுதியாக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  தற்போது பிரதமர் மோடியின் கடுமையான நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கு பணம்,  ஆயுதங்கள் வருவது தடைபட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் வாழ்ந்து வந்த காஷ்மீர் இந்துக்களும், பண்டிட்களும் முழுமையாக தங்களுடைய உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்து இம்மாநிலத்தை விட்டு வெளியேறி வெளி மாநிலங்களில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்துக்களின் மாநிலமாக இருந்த காஷ்மீர் தற்பொழுது முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஆதரவு தீவரவாதிகளின் புகழிடமாக உள்ளது என்றார்.   
நிகழ்ச்சியில் எழுத்தாளர் ராகுல் பண்டிதா, இந்தியா பவுன்டேசனின் மூத்த ஆராய்ச்சியாளர் குரு பிரகாஷ், எழுத்தாளர் டிம்பிள் கவுல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சரசுவதி நாராயணன் கல்லூரி முதல்வர் மு.கண்ணன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட  எராளமானோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →