மதுரை

ஐப்பசி பூரம்: திருப்பரங்குன்றத்தில் தெய்வானை வீதி உலா

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூரத்தையொட்டி திங்கள்கிழமை தெய்வானை அம்மன் வீதிஉலா  வந்து பக்தர்களுக் கு அருள்பாலித்தார். 
  திருப்பரங்குன்றம் கோயிலில் ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் ஐப்பசி பூரம் அன்று தெய்வானை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி பூரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்பு வெற்றிலை, பாக்கு, தேங்காய் பழம், காதோலை கருகமணி மற்றும் படியில் நெல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் ரத வீதிகள் வழியாக தெய்வானை அம்மன் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT