திருநகர் பள்ளியில் கலைத் திருவிழா
திருப்பரங்குன்றம் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா திருநகர் சவிதாபாய் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரைதிருநகர் பள்ளியில் கலைத் திருவிழா
திருப்பரங்குன்றம் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா திருநகர் சவிதாபாய் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா திருநகர் சவிதாபாய் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 105 பள்ளிகளில் இருந்து 805 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர்களுக்கு குழுநடனம், பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டி, களிமண்ணில் கலைநயம், அழகிய கையெழுத்து என 21 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள்அடுத்து மாவட்ட அளவில் நடைபெறவுள்ள போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என நடுவர் குழுவினர் தெரிவித்தனர். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.