முகப்பு
மதுரை

ரேஷன் கடையில் பொருள்கள் திருட்டு

உசிலம்பட்டி அருகே ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அரிசி, சீனி உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

உசிலம்பட்டி அருகே ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அரிசி, சீனி உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
     உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியில் ரேஷன் கடை உள்ளது. இக்கடையை விற்பனையாளர் செந்தில் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல் பூட்டிவிட்டுச்  சென்றுவிட்டார். இவர், புதன்கிழமை கடையை திறக்கச் சென்றபோது,  பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த 800 கிலோ அரிசி, 800 கிலோ சீனி, 40 லிட்டர் பாமாயில், 260 கிலோ கோதுமை ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
     இது குறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனனர். மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →