மதுரை

பளுதூக்கும் போட்டியில் வென்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

DIN

மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில் வென்ற, பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஏ.கே.மாதவன் பளுதூக்கும் போட்டியில், சரசுவதி நாராயணன் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணிதத் துறை மாணவி கே. ஐஸ்வர்யா 53 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தையும்,  இரண்டாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி ஏ. சித்ரா 48 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
          இதேபோல்,  மூன்றாம் ஆண்டு பொருளியல் துறை மாணவர் எம். விக்னேஷ்  62 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தையும்,  மூன்றாம் ஆண்டு கணிதத் துறை மாணவர் கே. சோணைமுத்து 69 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று கோப்பையை  வென்றனர்.
      வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழா, கல்லூரி முதல்வர் மு. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி விளையாட்டுத் துறை இயக்குநர் யுவராஜ் வரவேற்றார்.  துணை முதல்வர் கே. கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT