மதுரை

மதுரையில் வீடுவீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கல்

DIN

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.
       மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா சார்பில்,  டெங்கு விழிப்புணர்வு பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை, செல்லூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் புதன்கிழமை தொடக்கி வைத்தனர்.     எல்இடி திரையுடன் கூடிய இந்த வாகனத்தில், டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஆகியன எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், இந்த வாகனம் செல்லும் வீதிகளில் வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     மதுரை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட செல்லூர் 50 அடி சாலை,  60 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாகனப் பிரசாரம் நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT