மதுரை

மீனாட்சி மகளிர் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

DIN

மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.
 இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். முகாமில் அசல் மற்றும் நகல் கல்விச்சான்று, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.  மதுரை நகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இருபாலரும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT