மதுரை

இலவச எரிவாயு இணைப்பு பெற பணம் வசூல்: காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியரிடம் புகார்

DIN

இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம், காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். 
 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கொ.வீரராகவராவ் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது, மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமையில் அக்கட்சியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 
 அதில், இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்ட பயனாளிகளிடம் மத்தியில் ஆளும் கட்சியினர் பணம் பெற்று, எரிவாயு இணைப்புக்கான ஆணைகளை கட்சி நிகழ்ச்சிகளில் வழங்கி வருகின்றனர். அப்போது, சம்பந்தப்பட்ட கட்சிக்காக உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவற்றை கூறி பணம் வசூலிக்கின்றனர் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. 
ஏமாற்றமடைந்தவர்கள் புகார்: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டில் செயல்பட்ட தனியார் நிறுவனத்தில் பணம் கட்டியதாகவும், அதன்படி முதிர்வுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை எனவும் ஏராளமானோர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
 முகாமில் பார்வையற்றவர்களுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள், ஆறு வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சுழலும் வண்டிகள்,  திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என பல்வேறு உதவிகளையும் ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT