செந்தமிழ்க் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 57-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 311 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 57-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 311 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு நான்காம் தமிழ்ச்சங்க செயலர் ச.மாரியப்பமுரளி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரி குழுத் தலைவர் தசரதராமன் முன்னிலை வகித்தார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணபாஸ்கர் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். விழாவில் முதுகலை தமிழில் பட்டம் பெற்ற 38 பேர், இளங்கலை ஆய்வுப்பட்டம் பெற்ற (எம்.ஃபில்) 70 பேர், புலவர் பட்டம் பெற்ற 30 பேர் உள்ளிட்ட 311 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மு.நல்லகாமன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் சு.விஜயன், ஆட்சிக்குழு உறுப்பினர் அகமுடைநம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரி துணை முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். உதவிப் பேராசிரியை ம.செல்வத்தரசி நன்றி கூறினார்.