முகப்பு
மதுரை

இரண்டு பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு

சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை பார்க்கச் சென்ற இரு பெண்களிடம் 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை பார்க்கச் சென்ற இரு பெண்களிடம் 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி அமுதா (59). இவர், சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை பார்ப்பதற்காக சனிக்கிழமை தெற்குமாசி வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு, தேரோட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல், தேரோட்டத்தை பார்க்கச் சென்ற வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த முனியசாமி மனைவி வள்ளியம்மாள் (60) கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியும் பறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக அமுதா, வள்ளியம்மாள் ஆகியோர் அளித்த புகார்களின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →