சாலை விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் சாவு
உசிலம்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த விஜயன் மகன் ஜெகன்(32). இவர் குட்லாடம்பட்டி அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த விஜயன் மகன் ஜெகன்(32). இவர் குட்லாடம்பட்டி அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை மேலக்கால் - சோழவந்தான் சாலையில் தச்சம்பத்து பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஜெகன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து தொடர்பாக அவரது தந்தை விஜயன் அளித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.