தொழிலதிபரிடம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிப்பு
மதுரையில் தொழிலதிபரை தாக்கி ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகளை பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் தொழிலதிபரை தாக்கி ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகளை பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகர் வ.உ.சி. முதலாவது தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் காஜா மைதீன் (73). இவரது மகன் நிவாஸ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுந்தரம் பூங்கா வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரிடம் அடையாளம் தெரியாத இளைஞர் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். அவரை நிவாஸ் ஏற்றிச்சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவருடன் சேர்ந்து நிவாஸை தாக்கி சுந்தரம் பூங்காவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
சம்பவம் தொடர்பாக காஜா மைதீன் அளித்தப்புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.