காந்தி அருங்காட்சியகத்தில் கைத்தொழில்கள் பயிற்சி
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைத்தொழில்கள் பயிற்சி நடைபெறுகிறது.
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைத்தொழில்கள் பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியக செயலர் மா.பா.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கிராமக் கைத்தொழில் பயிற்சி நடைபெறுகிறது. அப்போது பாத்திரம் துலக்கும் சோப்புகள், துணியை துவைக்கப் பயன்படும் பவுடர், குளியல் சோப்புகள், ஓம வாட்டர் ஆகியவை தயாரிப்பதற்கான பயிற்சிகள் செயல்முறையுடன் அளிக்கப்படவுள்ளன. பயிற்சி முடிந்ததும் சான்றுகளும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜனை நேரிலோ அல்லது 98657-91420 என்ற செல்லிடப் பேசியிலோ தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.