முகப்பு
மதுரை

தனியார் பேருந்து மரத்தில் மோதி 8 பேர் காயம்

மேலூரிலிருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற தனியார் பேருந்து  மரத்தில் மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:11 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மேலூரிலிருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற தனியார் பேருந்து  மரத்தில் மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
மேலூரிலிருந்து தனியார் பேருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. கோட்டநத்தம்பட்டி அருகே  எல்லைப் பந்தயத்துக்காக மாட்டு வண்டிகளை  சிலர் ஓட்டிவந்துள்ளனர். அவ்வழியாக தனியார் பேருந்து வந்தபோது, மாடுகள் மிரண்டு சாலையின் குறுக்கே சென்றதாம். மாட்டுவண்டி மீது மோதுவதை தவிர்க்க,  ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மங்கையர்கரசி (55) பொன்னழகு (45)  உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.