முகப்பு
மதுரை

குறைதீர் கூட்டத்தில் ரூ.9 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.9.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.9.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.
இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவி, விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள் உதவி, இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் 347 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள், பல்வேறு சிறப்பு குறைதீர் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, 11 பயனாளிகளுக்கு ரூ.9.08 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் நிர்மலா ராஜம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →