முகப்பு
மதுரை

மதிமுக-நாம் தமிழர் கட்சியினர் மோதல் வழக்கு: சீமானுக்கு முன் ஜாமீன்

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதிக்கொண்ட வழக்கில், சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதிக்கொண்ட வழக்கில், சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டம், கதிராமங்கலத்தில் நடைபெறும் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அங்குள்ள மக்களைச் சந்திப்பதற்காக கடந்த மே 19 ஆம் தேதி, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தேன்.
அதே விமானத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தின் வெளியே என்னை வரவேற்க காத்திருந்த என் கட்சி தொண்டர்களுக்கும், வைகோவின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களின் வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. எனவே, இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன், திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →