தடகளப் போட்டியில் வெற்றி: தலைமைக் காவலருக்கு பாராட்டு
தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற தலைமைக் காவலரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் புதன்கிழமை பாராட்டினார்.
தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற தலைமைக் காவலரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் புதன்கிழமை பாராட்டினார்.
இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அகில இந்திய மூத்தோர் தடகள கூட்டமைப்பு சார்பில் 39-ஆவது தேசிய மூத்தோர் தடகளப்போட்டிகள், –கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மதுரை மாநகரக் காவல்துறை கோ.புதூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சிதம்பரம் (40) தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார். இதில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டி மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற தலைமைக்காவலர் சிதம்பரத்தை, மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.