முகப்பு
மதுரை

தனியார் நிறுவனத்தில் ஒடிசா இளைஞர் சாவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே  தனியார் தொழிற்சாலையில் புதன்கிழமை வெளி மாநிலத் தொழிலாளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். 

Updated On : 29 மார்ச், 2018 at 8:17 AM
பகிர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே  தனியார் தொழிற்சாலையில் புதன்கிழமை வெளி மாநிலத் தொழிலாளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். 
  அலங்காநல்லூர் அருகே வாகைக்குளத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த மதாப் ஜாபர் (19) என்பவரும் பணிபுரிந்து வந்தார். 
  இந்நிலையில், புதன்கிழமை காலையில் நிறுவன வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மதாப் ஜாபர் குளித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினர் அளித்தப் புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.