முகப்பு
மதுரை

பார் கவுன்சில் தேர்தல்: மதுரையில் 3,981 வாக்குகள் பதிவு

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மதுரை வழக்குரைஞர்கள் 3,981 பேர் வாக்களித்தனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 8:18 AM
பகிர்:

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மதுரை வழக்குரைஞர்கள் 3,981 பேர் வாக்களித்தனர்.
   தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 1611 வழக்குரைஞர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இவர்கள் வாக்களிப்பதற்காக உயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் உள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் பெண் வழக்குரைஞர்கள் சங்கத்திலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் தலா 800 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 தேர்தல் கண்காணிப்பு அலுவலராக மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் எல்.எஸ்.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார். காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 247 பேர் வாக்களிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மொத்தம் 84.72 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில் 2 ஆயிரத்து 617 பேர் வாக்களித்தனர். இதையடுத்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மாலையில் தனி வாகனத்தின் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.