பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
மதுரையில் மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் நகையை, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாக, ஞாயிற்றுக்கிழமை வழக்கு
மதுரையில் மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் நகையை, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாக, ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை புதூர் மண்மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி லூர்து மேரி ((50), பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை டிஆர்ஓ காலனியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் லூர்து மேரி அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.