முகப்பு
மதுரை

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் சாவு

மதுரை அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற பெண், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து

Updated On : 14 மே, 2018 at 5:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

மதுரை அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற பெண், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக, ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள எம்.சத்திரப்பட்டி கருவனூரைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி கச்சம்மாள் (50). இவர், அப்பகுதியில் உள்ள பண்ணையில் கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்றுள்ளார். முதல் நாள் வீசிய காற்றில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாத கச்சம்மாள் புல் அறுக்கச் சென்றபோது, அந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது கணவர் மலைச்சாமி அளித்த புகாரின்பேரில், எம்.சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.