மதுரை விமான நிலையத்தில்துபையில் இருந்து கடத்தி வரப்பட்டரூ.23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் துபையில் இருந்து பெண் பயணி கடத்தி வந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை விமான நிலையத்தில் துபையில் இருந்து பெண் பயணி கடத்தி வந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை விமான நிலையத்துக்கு துபையில் இருந்து பயணிகள் விமானம் திங்கள்கிழமை மாலை வந்தது. அந்த விமானத்தில் வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்டனர்.
அப்போது, திருச்சியைச் சேர்ந்த அலிமா (38), தனது உள்ளாடையில், தங்கத்தை ரப்பருடன் கலந்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 1 கிலோ 400 கிராம் எடையுள்ள ரப்பர் கலவையில் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் உள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து, அலிமாவிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.