மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
உசிலம்பட்டி கோட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
உசிலம்பட்டி கோட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மேற்பார்வை பொறியாளர் ஜா.பிரீடா பத்மனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உசிலம்பட்டி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 22) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்தக் கூட்டம் வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.