மதுரை

ராமேசுவரம்-சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்

DIN

ராமேசுவரத்தில் இருந்து  சென்னைக்கு சனிக்கிழமை சிறப்பு ரயில் (06053) இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேசுவரம்- சென்னை எழும்பூர் இடையே சனிக்கிழமை (நவ. 10)  சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45-க்கு சென்னை எழும்பூர் சென்றுசேரும்.
 இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டி,   குளிரூட்டப்பட்ட  2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி ஒன்று,  குளிரூட்டப்பட்ட 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இரண்டு,  இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி 8 மற்றும்  இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 4  இணைக்கப்பட்டிருக்கும். 
  இந்த ரயில் மண்டபம்,  ராமநாதபுரம்,  மானாமதுரை,  மதுரை , கொடைக்கானல் ரோடு,  திண்டுக்கல்,  திருச்சி,  விருத்தாசலம்,  விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT