மதுரை

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

மதுரை மாவட்டத்தில் மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தகுதி அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   தமிழக அரசின் அறிவியல் நகரம் சார்பில் மாவட்ட அளவில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், புவியியல் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் மாநில கல்வித்துறையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
 மதுரை மாவட்டத்தில் பாடவாரியாக மொத்தம் 5 ஆசிரியர்களுக்கு சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகள் ரூ.25 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச்சான்று என வழங்கப்படவுள்ளன. ஆகவே தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் கல்வித்துறையின் இணையதளத்தில் நேரடியாகவே விண்ணப்பிக்கலாம்.
 விண்ணப்பங்கள் அடிப்படையில் பெயர்கள் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் நிலையில், தகுதி அடிப்படையில் அலுவலகம் சார்பில் பரிந்துரைக்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்க இயலும் என்பதால் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT