மதுரை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விநாடி - வினா

DIN

பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விநாடி வினா போட்டிக்கு வெள்ளி வீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்பட 4  பள்ளிகள் தேர்வாகியுள்ளன.
 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விநாடி -வினா போட்டி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி அளவில் தொடங்கி, கல்வி மாவட்டம்,  வருவாய் மாவட்டம் அளவில் நடத்தி நிறைவாக மாநில அளவிலான போட்டி நடத்தப்படும்.
பாடப்புத்தகத்தைத் தாண்டி தங்களது பொது அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது,  தாங்கள் கற்றதை அன்றாட வாழ்வியலோடு தொடர்புபடுத்தி பார்ப்பது, மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைப்பது, குழு மனப்பான்மையை உருவாக்குவது, தனித்திறன்களை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் இப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி, பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 இதில் மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி (மதுரை கல்வி மாவட்டம்), தனியாமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி (மேலூர்),  திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி (திருமங்கலம்), கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி (உசிலம்பட்டி) ஆகிய பள்ளிகள் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT