திருப்பரங்குன்றம் அருகே விபத்தில் மூதாட்டி சாவு
திருப்பரங்குன்றம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
திருப்பரங்குன்றம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டி சத்திரபட்டியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் வேனில் அழகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தார். சம்பக்குளம் விலக்கு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனில் வந்த சுப்புத்தாய்(65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த தவமணி (75),கோபாலகிருஷ்ணன்(30), பாலாஜி(12), ஸ்ரீதரன்(10) உள்பட 16 பேர் காயமடைந்தனர்.
இதில் லேசான காயமடைந்த 13 பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மேனகா, கோபால், நடராஜன் ஆகிய மூவரும் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.