சுற்றுலாப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி சாவு
பெருங்குடியை அடுத்த பரம்புப்பட்டி அருகே சுற்றுலாப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி இறந்தது
பெருங்குடியை அடுத்த பரம்புப்பட்டி அருகே சுற்றுலாப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி இறந்தது குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரையை அடுத்த திருப்புவனத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து பரம்புபட்டி அருகே வளைவில் வந்தது. அப்போது சாலையோரத்தில் நடந்து சென்ற பரம்புப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன்(42) மீது சுற்றுலாப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலே ராஜேந்திரன் உயிரிழந்தார்.
விபத்து குறித்து பெருங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.