முகப்பு
மதுரை

தற்காலிக அரசு பிரகடன பவள விழா 

நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்க பிரகடன பவள விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:36 AM
பகிர்:

நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்க பிரகடன பவள விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவிற்கு நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் வே.சுவாமிநாதன் தலைமை வகித்தார். விழாவில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.  பின்னர் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் வாழ்க்கைச் சம்பவங்களின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தியாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவேகானந்தர் பேரவை நிறுவனர் சுவாமி சதாசிவானந்தா, சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதி தலைவர் ஐ.பெரியசாமி, நேதாஜி தேசிய இயக்க நிர்வாகி வே.கதிரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.