மதுரை

போலி ஆவணங்கள்  கொடுத்து வீட்டுக்கடன் பெற்ற  2 பேர் மீது வழக்கு

DIN

மதுரையில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டு கடன் பெற்ற 2 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
   மதுரை அருகே திருப்பாலையைச் சேர்ந்த குமரவேல், நிலையூரைச் சேர்ந்த பெருமாள். இவர்கள் நாராயணபுரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், திருப்பரங்குன்றம் பகுதியில் தங்களுக்கு செந்தமாக நிலம் இருப்பதாகக் கூறி வீட்டுக் கடனாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பெற்றுள்ளனர். 
   இந்நிலையில் வங்கியின் தணிக்கைக்குழு ஆவணங்களை ஆய்வு செய்த போது திருப்பரங்குன்றம் பகுதியில் இவர்கள் பெயரில் நிலம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலி ஆவணங்களை தயார் செய்து வீட்டுக் கடன் பெற்றது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் சையத் இஸ்மாயில் அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் குமரவேல் மற்றும் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT