மதுரை

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு தொழில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

குழந்தைகளின் தொழில் கல்வி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகைக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ரா.வரதராஜன் வெளியிட்டுள்ள செய்தி:
தொழில் கல்வியில் சேர்ந்துள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 2-வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, நிகழ் ஆண்டில் (2019-2020) தொழில் கல்வியில் சேர்ந்துள்ளவர்கள் இந்த கல்வி உதவித் தொகையைப் பெறலாம்.
 முன்னாள் படைவீரர்கள் ஒவ்வொருவருக்கும் 2 குழந்தைகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். நிகழ் ஆண்டு முதல் உதவித் தொகை ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, தகுதி உடைய முன்னாள் படைவீரர்கள் உதவித் தொகை பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பன விவரங்களை 
(w‌w‌w.‌k‌s​b.‌g‌o‌v.‌i‌n) என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
 மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இந்த உதவித் தொகை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT