மதுரை

கஞ்சா விற்ற 6 பேர் கைது:  5 கிலோ பறிமுதல்

DIN

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்ற 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
 மதுரை மாவட்டம் சோழவந்தான், கிணற்று தெருவில் கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி முத்து (45) மற்றும் அவரது மகன் அருள்செல்வம் (24) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது குறித்து சோழவந்தான் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 2.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே எம். பாரைப்பட்டியைச் சேர்ந்த ராமர்(45). இவர் அதே பகுதியில் வியாழக்கிழமை கஞ்சா விற்பனை செய்தபோது எழுமலை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1.500 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். உசிலம்பட்டி அருகே கின்னிமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை கஞ்சா விற்ற திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த விஜயபாண்டி(31)யை செக்கானூரணி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
இதே போன்று மேலூர் பகுதியில் கஞ்சா விற்ற முகமதியாபுரத்தைச் சேர்ந்த நாகராஜ்(20) என்பவரை மேலூர் போலீஸாரும், சேடப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற அலிகுன்றம் வடக்கு தெருவைச் சேர்ந்த பாண்டி(46)யை சேப்பட்டி போலீஸாரும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT