மதுரை

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு கருத்தரங்கு

DIN

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வைரவிழா அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் கி.வேணுகா தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி பேசும்போது,  சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அறிமுகமற்ற நபர்கள் செல்லிடப்பேசியில் பேசும்போது எச்சரிக்கையோடு பதிலளிக்க வேண்டும். ஆண் நண்பர்களோடு பழகுவதில் மிகுந்த எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். அனைத்து நேரங்களிலும் விழிப்புணர்வு இருந்தால் பல்வேறு பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்றார். முன்னதாக உதவிப்பேராசிரியர் சாந்தி தேவி வரவேற்றார். 
கல்லூரியின் துணை முதல்வர் கோ.சுப்புலட்சுமி நன்றியுரை ஆற்றினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT