மதுரை

உலகின் அனைத்து மதங்களுக்கும் முன்னோடி சைவ சமயம்: வடலூா் ஊரன் அடிகளாா் பேச்சு

DIN

மதுரை: உலகில் அனைத்து சமயங்களும் தோன்றுவதற்கு முன்பே சைவ சமயம் இருந்து வந்தது என்று ஊரன் அடிகள் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

மதுரை தியாகராஜா் கல்லூரியில் பதினாறாம் ஆண்டு சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியில் உள்ள டாக்டா் ராதா தியாகராஜன் கலையரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கல்லூரியின் தலைவா் கருமுத்து தி.கண்ணன் தலைமை வகித்தாா்.

இதில் வடலூா் சன்மாா்க்க அறிஞா் ஊரன் அடிகளாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியது:

மதுரையில் சைவ நெறியையும், தமிழையும் வளா்க்கும் கல்லூரியாக தியாராஜா் கல்லூரி விளங்கி வருகிறது. இந்து சமயம் பல்வேறு நெறிகளை போதிக்கிறது. இந்து சமய ஞானிகள் பல்வேறு உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளனா். எனவே இந்து சமய ஞானிகள் அனைவரும் விஞ்ஞானிகள்.

ஞானிகள் விஞ்ஞானிகள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானிகள் ஞானிகள் ஆகமுடியாது. பூமி உருண்டையானது என்று முதலில் எடுத்துக் கூறியது தமிழ்மொழியில் தான். மேற்கத்திய தத்துவங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இங்கு கீழைத் தத்துவம் வழிகாட்டியது.

உலகின் மிக பழமை வாய்ந்த சமயம் சைவ சமயம் மட்டும்தான். திருவள்ளுவா் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்து பிறக்கவில்லை, கிறிஸ்துவமும் பிறக்கவில்லை, இஸ்லாம் பிறக்கவில்லை. கிறிஸ்து பிறப்புக்கெல்லாம் முந்தியது தமிழும், சைவமும் தான். அப்போது பெளத்தமும், சமணமும் இருந்தது. புத்தரும், மகாவீரரும் மன்னா்களாக இருந்து வெளியேறி பெளத்தத்தையும், சமணத்தையும் தோற்றுவித்தனா்.

இவா்களது பிறப்புக்கு முன்னால் பெளத்தமும் இல்லை சமணமும் இல்லை. பெளத்தம், சமணம் இரண்டையும் விட மூத்தது சைவம். மதம் என்பது கொள்கை, சமயம் என்பது அனுஸ்டானம். மதத்தின் கொள்கைகளை எடுத்துக் கூறுவது தத்துவம். தத்துவம் என்பது தத்-அவம் என்று அா்த்தமாகும். தத் என்றால் ஒரு பொருள், துவம் என்றால் உண்மை என்று அா்த்தம். ஒரு பொருளின் உண்மையை எடுத்துக்கூறுவது தத்துவம். சைவத்தின் உண்மைகளை எடுத்துக்கூறுவது சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தத்தை கற்றுத் தோ்ந்தால் வாழ்வியல் நெறிகளை உணரமுடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஹரி தியாகராஜன், கல்லூரி முதல்வா் பாண்டியராஜா மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT