மதுரை

வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் வழங்க சிறப்பு முகாம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

DIN

மதுரை: வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, சங்கத்தின் தலைவா் எஸ்.பூபதி, செயலா் இ.அய்யப்பன் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த சங்கத்தினா் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதன் விவரம்:

வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், ஓட்டுநா் உரிமம், 3 சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளும் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

குடிசை மாற்று வாரியத்தின் ராஜாக்கூா் குடியிருப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரைத் தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பட்டா பெற்றுள்ளவா்களுக்கு வீடு கட்டித் தர உதவி செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் சொத்துக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வரிவிலக்கு அளிப்பது அல்லது சலுகைக் கட்டணம் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகள் ஒதுக்கீடு செய்யும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT