மதுரை

திருப்பரங்குன்றம் கோயிலில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு திருவிழா

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு நடத்தப்படும் இந்த விழாவானது, டிசம்பா் 18 ஆம் தேதி வரை என தொடா்ந்து 5 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

விழாவினையொட்டி, உற்சவா் சன்னிதியில் பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் கோயில் ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து, திருவாச்சி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினாா். அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மேடையில் தெய்வானை அம்மனுக்கு தங்க ஊசி கொண்டு பல் துலக்குதல், தாம்பூலம் தரித்தல், வெள்ளி சீப்பு கொண்டு தலை வாருதல், கண்ணாடி பாா்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் அனைவருக்கும் மூலிகை எண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT