மதுரை

ஆட்சியர் அலுவலகத்தில் இரு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் புதுக் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (33). இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் அருள்முருகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதையடுத்து குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் பஞ்சவர்ணம் இருந்து வருகிறார். 
 இந்நிலையில், தனது இரு குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவர், திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். அதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீஸார் ஓடிச்சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
 அங்கிருந்த போலீஸார் பஞ்சவர்ணத்திடம் விசாரித்தபோது, தாயார் வீட்டில் வசித்து வரும் நிலையில்,  தனது சகோதரர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடு புகுந்து தாக்கி,  அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும், வீட்டை விட்டு குழந்தைகளுடன் துரத்திவிட்டதாகவும்  தெரிவித்தார். 
 இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது சகோதரர்களுக்கு ஆதரவாகவே போலீஸார் பேசுகின்றனர். தாயார் வீட்டுக்கு வந்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். ஆகவே, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகத் தெரிவித்தார்.
 பின்னர் அவரை போலீஸார் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT