மதுரை

அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 கழிப்பறைகள்

DIN

மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ரூ.1.20கோடி மதிப்பில் 100 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனிக்கழிப்பறைகளை வரும் கல்வியாண்டில் கட்டுவதற்கு கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் 42 தொடக்கப் பள்ளிகள், 28 நடுநிலைப் பள்ளிகள், 8 உயர்நிலைப் பள்ளிகள், 18 மேல்நிலைப்பள்ளிகளில் தலா ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வரும்படி பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தொடர்பான விவரங்கள் மாவட்டமுதன்மை கல்வி அலுவலகம் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தொடங்கவுள்ள கழிப்பறை கட்டுமானப் பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT