மதுரை

மாணவிகளிடம் பாலியல் பேர வழக்கு: விடுவிக்கக் கோரி முருகன் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

DIN

மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி  உதவிப் பேராசிரியர் முருகன் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய வழக்கில் நிர்மலா தேவி மீது வழக்கு தொடரப்பட்டு, அவர் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆனால், என் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட  நிர்மலா தேவி, என் மீது எத்தகைய குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதேபோல பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் வழக்கில் தொடர்புடைய யாரும் என் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. 
எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடன் சுமையால் தவித்து வருகிறோம்.
இந்நிலையில்,  என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, நான் தொடர்ந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 எனவே, மகிளா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT