மதுரை

தொழிலதிபர் வீட்டில் 417 பவுன் நகைகள் திருட்டுஉறவினர் உள்பட இருவர் கைது

DIN

மதுரை கீரைத்துறையில் தொழிலதிபர் வீட்டில் 417 பவுன் நகை திருடப்பட்ட சம்பவத்தில் அவரது உறவினர் உள்பட இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, 217 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை காமராஜர்புரம் குமரன் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல்(72). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் விறகு மண்டி உள்பட பல்வேறு தொழில்களை  செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் 417 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சத்தை கடந்த 12-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். 
 இதுதொடர்பாக தங்கவேல் அளித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தங்கவேலின் உறவினர்கள் உள்பட பலரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தங்கவேலின் பேத்தியின் கணவர் சொக்கர்,  சைவத்துரை உள்பட மூன்று பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. 
 அதையடுத்து சொக்கர், சைவத்துரை இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருட்டில் ஈடுபட்டதையும், அன்றைய தினமே நகை, பணத்தை பங்கு பிரித்ததையும் ஒப்புக்கொண்டனர். 
 பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்து  அவர்களிடம் இருந்து 217 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT