மதுரை

கோயில் சிலையை சேதப்படுத்திய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

DIN

இருதரப்பு மோதலில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் ஆஜராகாத காவல் ஆய்வளாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் எம்.புளியங்குளத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக 2018-இல் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது, கோயிலில் உள்ள சாமி சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வில்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் 10 முறை விசாரணைக்கு வந்துள்ளது. இதில், சம்பவத்தின்போது வில்லூர் காவல் ஆய்வாளராக இருந்த குருவெங்கட்ராஜ் ( தற்போது தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பணியாற்றுகிறார்) ஒரு முறை கூட ஆஜராகவில்லை. 
 அவர் ஆஜராகி சாட்சியம் அளிக்காததால் விசாரணை நடத்த முடியாமல் தள்ளி வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நசீமா பானு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT