மதுரை

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கை பார உற்சவம்

DIN


திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழாவின் 5 ஆம் நாளான சனிக்கிழமை கை பார உற்சவத் திருவிழா நடைபெற்றது.  
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். தொடர்ந்து 15 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 5 ஆம் நாளில் கை பார உற்சவத் திருவிழா நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் கிராமத்தார் சார்பில் கொண்டாடப்படும் இத் திருவிழாவில், கோயிலில் அதிக எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தை பக்தர்கள் தங்கள் உள்ளங்கைகளில் வைத்து தூக்கி வருவர். இத்திருவிழாவானது, இந்திரனின் வெள்ளை யானையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையோடு பறந்து வருவதை குறிக்கவே கொண்டாடப்படுவதாக கிராமத்தார் தெரிவிக்கின்றனர்.
விழாவை முன்னிட்டு, சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி  தெய்வானையுடன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அதையடுத்து, கிராமத்தார் வாகனத்தை தங்கள் உள்ளங்கைகளில் பெரிய ரத வீதியிலிருந்து கோயில் வாசல் வரையும், பின்னர் கோயில் வாசலில் இருந்து மீண்டும் பெரிய ரத வீதிக்கும் ஓட்டமும் நடையுமாக தூக்கி வந்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT