மதுரை

இலங்கையில் விடுவிக்கப்பட்ட  26 மீனவர்கள் மதுரை வருகை

DIN

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட  ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 26 பேர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை  மதுரை வந்தனர்.  
 புதுக்கோட்டை  மாவட்டம் ஜெகதாபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம்  நம்புதாளை பகுதி மீனவர்கள் 13 பேர் கடந்த பிப். 20 மற்றும் 25 ஆம் தேதிகளில்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது எல்லை தாண்டியதாக  இலங்கை   கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 
இதேபோல ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 5 பேர் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியும்,  மண்டபம் பகுதி மீனவர்கள் 8 பேர் கடந்த 20 ஆம்  தேதியும் இலங்கை கைது செய்யப்பட்டனர். 
 இவர்கள் அனைவரும் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். 
 இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி மீனவர்கள் 26 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து அவர்கள்,  இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.  
 இந்நிலையில் இலங்கையிலிருந்து விமானம் மூலம் 26 பேரும் சனிக்கிழமை மதுரை வந்தனர்.  அவர்களை மீன் வளத்துறை ஆய்வாளர்கள் நடேசன், ரமேஷ்பாபு, சகுபர் சாதிக், நடேஷ்பிரபு ஆகியோர்  வேன் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT