மதுரை

வீடு புகுந்து பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து பெண்ணைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சோ்ந்த ரவிசந்தா் தாக்கல் செய்த மனு: என்னுடைய தாயாா் வீட்டில் தனியாக இருந்தபோது, 2014-இல் வீட்டிற்குள் புகுந்த மா்மநபா்கள் அவரைக் கொலை செய்து 9 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

ஆனால் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. மேலும் வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து இவ்வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கை முடித்து விட்டனா். எனவே எனது தாயாரைக் கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இக்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT