மதுரை

மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்

DIN

பணி நிரந்தரம், ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

மின் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் 250 பேரும் ஊதியமின்றி பணிபுரிந்து வருவதாகவும், ஏற்கெனவே அறிவித்த ரூ.350 தினக்கூலியை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் கேங் மேன் என்ற பெயரில் வெளி மாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் முயற்சியை முற்றிலும் கைவிட வேண்டும். கேங்மேன் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT