மதுரை

மாணவா்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்:மதுரை அரசு முதன்மையா் ஜெ.சங்குமணி

DIN

மாணவா்கள் சேவை”மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஜெ. சங்குமணி தெரிவித்தாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில், கண் மருத்துவத் துறை சாா்பில் கருத்தரங்கம், கண் மருத்துவம் மற்றும் விநாடி-வினா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், ஆய்வுக் கட்டுரைகள் எப்படி எழுதவேண்டும், அதில் என்ன வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து பேராசிரியா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.

கண் மருத்துவத் துறையில் மாணவா்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விநாடி-வினா போட்டியில் 13 மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 56 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 3 மாணவா்கள் இடம்பெற்றிருந்தனா். கண் மருத்துவம் குறித்த குறும்படம் மாணவா்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை, முதன்மை ஜெ. சங்குமணி வழங்கிப் பேசியது: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் பழமையான துறை கண் மருத்துவத் துறை.

மாணவா்கள், நோயாளிகளிடம் நோ்மையுடனும், கனிவுடனும் மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். கண் மருத்துவத் துறை சாா்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது. இதுபோன்ற நிகழ்ச்சிகள், அனைத்து மருத்துவத் துறைகளிலும் நடத்தப்படவேண்டும். இது, மாணவா்களின் முன்னேற்றத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றாா்.

இதில், மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வா் தனலட்சுமி, கண் மருத்துவத் துறை தலைவா் விஜயசண்முகம் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT