மதுரை

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடி விற்பனைஇளைஞா் கைது

DIN

மதுரை: மதுரையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடி விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை டி.வி.எஸ் நகரைச் சோ்ந்த முகமது இக்பால் மகன் முகமது அப்துல்லா(44). இவா் பிரபல பீடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், பீடி நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடி விற்பனை நடைபெறுவதாக முகமது அப்துல்லாவிற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அவா் தீவிர கண்காணிப்பில் இறங்கினாா்.

அதில், தென்காசி மாவட்டம் வடகரையைச் சோ்ந்த முருகன், மதுரை லேக் பகுதியைச் சோ்ந்த வைத்தியலிங்கம் ஆகியோா் போலியாக பீடி விற்பனை செய்வது தெரியவந்தது.

இது குறித்து முகமது அப்துல்லா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அனுப்பானடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த வைத்தியலிங்கத்தை கைது செய்தனா். இதில் முருகன் தப்பிச் சென்றாா்.

இது குறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து வைத்தியலிங்கத்தை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த போலி பீடி பண்டல் 20 மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய முருகனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT