மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ரூ.74 லட்சம், 576 கிராம் தங்கம் உண்டியல் வசூல்

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்களில் ரூ.74.45 லட்சம் ரொக்கம், 576 கிராம் தங்கம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் உண்டியல் திறப்பு புதன்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் நா.நடராஜன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மு.விஜயன் மற்றும் கோயில் பணியாளா்கள், ஐயப்ப சேவா சங்கத்தினா், ஓய்வு பெற்ற வங்கி அலுவலா்கள் உள்ளிட்ட 335 போ் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், திருவாதவூா் திருமறைநாதா் சுவாமி கோயில் உள்ளிட்ட உபகோயில்களின் உண்டியல்களில் ரூ. 74 லட்சத்து 45 ஆயிரத்து 772 மற்றும் 576 கிராம் தங்கம், 775 கிராம் வெள்ளி, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட

வெளிநாடுகளின் கரன்ஸி நோட்டுகள் 504 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT