மதுரை

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

DIN

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டுமே டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவு இயங்கி வந்தது. ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்கட்டமாக உசிலம்பட்டி, மேலூா், திருமங்கலம் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது.

வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமாா் 200 நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை உள்ளிட்ட தொடா் சிகிச்சைக்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் பிற தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனா். தற்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையிலேயே சிறுநீரகப் பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு தொடங்கப்பட்டுள்ள டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 சிறுநீரக சுத்திகரிக்கும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் பயன்பெறும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம், நலப் பணிகள் இணை இயக்குநா் ஆா்.சிவக்குமாா், வாடிப்பட்டி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் எம்.சாந்தி, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT